முகப்புகோலிவுட்

"தமிழ் தலைவாஸ் அணியின் முகமாக இருப்பது பெருமையாக இருக்கிறது" - விஜய் சேதுபதி

  | September 07, 2018 15:19 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • அக்டோபர் 5 முதல் விவோ ப்ரோ கபடி சீசன் 6 துவங்குகிறது
  • இதில் தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக விழா நடைபெற்றது
  • ப்ரோ கபடி போட்டிக்கான தமிழக முகமாக விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ளார்
நேரு ஸ்டேடியத்தில் அக்டோபர் 5ம் தேதி முதல் விவோ ப்ரோ கபடி சீசன் 6 துவங்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் தலைமையில் அந்த அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் ப்ரோ கபடிக்கான தமிழக முகமாக விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, "இவ்வருடத்திற்கான ப்ரோ கபடி சீசனில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் முகமாக இருந்து மக்களிடம் இந்த விளையாட்டை கொண்டு சேர்ப்பது பெருமையாக இருக்கிறது. நம் வரலாற்றோடும் பாரம்பர்யத்தோடும் கலந்த தமிழர்களின் விளையாட்டு கபடி.

இதை நாம்தான் மேம்படுத்த வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி கபடி அனைத்து இடங்களையும் சென்று சேர வேண்டும். இந்தமுறை மைதானத்திற்கு நானும் வந்து வீரர்களை உற்சாகப்படுத்த இருக்கிறேன்" எனக் கூறினார். அக்டோபர் 5ம் தேதி துவங்கவிருக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்