முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி, சமந்தா நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஷூட்டிங் நிறைவுற்றது!

  | June 13, 2018 00:33 IST
Super Deluxe Movie

துனுக்குகள்

  • 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இயக்கும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'
  • விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது
  • ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிக அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கொண்டாடப்படும் 'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இயக்கும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, சமந்தா, பாஹத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு முன்னர் 'அநீதி கதைகள்' என பெயரிடப்பட்டிருந்தது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இப்படத்தில் வேலை செய்திருப்பதாலும், இயக்குனர்கள் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான எழுத்தாளர்கள் சேர்ந்து இப்படத்திற்கு திரைக்கதை அமைத்திருப்பதாலும், புதுமையான முயற்சிகளை விரும்பும் சினிமா ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிக அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் இன்று நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த சமந்தா, பாஹத் பாசில் மற்றும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் கேக் வெட்டி படத்தின் ஷூட்டிங் நிறைவை கொண்டாடுவதை சமந்தா ட்விட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்