விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஃபைனல் ஷெட்யூலில் விஜய் சேதுபதியின் 'ஜுங்கா'

  | March 12, 2018 12:38 IST
Vijay Sethupathi Junga

துனுக்குகள்

  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சயிஷா நடிக்கிறார்
  • இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
  • இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’. ‘IABK’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சயிஷா டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்து வருகிறார், VJ.சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘A&P குருப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ‘கூட்டிப்போ கூடவே’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் துவங்கப்படட் படத்தின் டப்பிங் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, ஃபைனல் ஷெடியூலுக்காக விஜய் சேதுபதி சுவிட்சர்லாந்துக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்