விளம்பரம்
முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி, த்ரிஷா டூயட் பாடியுள்ள '96' டீசர்

  | July 12, 2018 18:59 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குகிறார்
  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடியுள்ள முதல் படமாம்
  • சமீபத்தில், படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி வரும் இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியுள்ளார். இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் வலம் வரவுள்ளாராம்.
 
கோவிந்த் வஸந்தா இசையமைத்து வரும் இதற்கு மகேந்திரன் ஜெயராஜு - சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர், கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து வருகிறார்.
 

சமீபத்தில், படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்