முகப்புகோலிவுட்

‘96’ ரிலீஸ் விவகாரம் - ரூ.1.50 கோடியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க விஷால் முடிவு

  | October 06, 2018 13:11 IST
96 Movie

துனுக்குகள்

  • நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன் தினம் வெளியான படம் ‘96’
  • இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார்
  • விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார்
கோலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன் தினம் (அக்டோபர் 4-ஆம் தேதி) வெளியான படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார். கோவிந்த் வஸந்தா இசையமைத்திருந்த இதற்கு மகேந்திரன் ஜெயராஜு - சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தனர், கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கெனவே, தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று முன் தினம் பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்த தொகையை தருவதாக கூறிய பிறகு பிரச்சனை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.

இது தொடர்பாக தற்போது விஷால் தரப்பில் விசாரித்தபோது, திரு. விஷால் அவர்கள் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று முன் தினம் இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார். திரு.நந்தகோபால் அவருக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால் அவர்கள், திரு.நந்தகோபால் அவரிடமே பெற்றுக்கொள்கிறார். அதுவரைக்கும் அந்த தொகைக்கு விஷால் அவர்கள் வட்டியும் கட்டுவார். ஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை திரு.விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் அவர்கள் நினைக்கிறார். மேலும், இந்த பிரச்சனையிலிருந்து விஜய்சேதுபதி அவர்கள் எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது, வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்” என்று விஷால் தரப்பில் கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்