முகப்புகோலிவுட்

தெலுங்கில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் ‘96’

  | September 11, 2018 16:03 IST
96 Movie

துனுக்குகள்

  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இளம் வயது விஜய் சேதுபதியாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா நடித்துள
  • இதன் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது
கோலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ள இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியுள்ளார். இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் வலம் வரவுள்ளாராம்.

கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ள இதற்கு மகேந்திரன் ஜெயராஜு - சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர், கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் தமிழ் வெர்ஷனின் ரிலீஸ் தேதி அக்டோபர் 5 என சொல்லப்படுகிறது
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்