முகப்புகோலிவுட்

கன்னடத்தில் ரீமேக்காகும் விஜய் சேதுபதி படம்

  | December 04, 2018 14:10 IST
96

துனுக்குகள்

  • கடந்த மாதம் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘96’
  • இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார்
  • இந்த படம் கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
கோலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘96'. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர்.

கோவிந்த் வஸந்தா இசையமைத்திருந்த இதற்கு மகேந்திரன் ஜெயராஜு - சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தனர், கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படம் கன்னடத்தில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘99' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள கன்னட வெர்ஷனில் ஹீரோவாக கணேஷ் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை இயக்குநர் ப்ரீதம் குப்பி இயக்கவுள்ளார். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்