‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’. ‘IABK’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சயிஷா டூயட் பாடி ஆடியுள்ளார்.
மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு நடித்துள்ளார். ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டின் கெஸ்ட் ரோலில் வலம் வரவுள்ளாராம். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார், VJ.சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘A&P குருப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை இம்மாதம் (ஜூலை) இறுதியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.