முகப்புகோலிவுட்

வெளியானது விஜய் சேதுபதியின் `ஜுங்கா' டிரெய்லர்

  | June 13, 2018 11:36 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் உருவாகும் படம் `ஜுங்கா'
  • சயிஷா, மடோனா செபாஸ்டின் இதில் நடிக்கிறார்கள்
  • இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது
`காஷ்மோரா' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து `ஜுங்கா' படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் உருவான `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. எனவே ஜுங்கா படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி படத்தின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. சயிஷா, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். டட்லே ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.
 

நியோ-நாயர் கேங்க்ஸ்டர் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நடித்ததோடு, படத்தையும் தயாரித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படம் தவிர பாலாஜி தரணிதரன் இயக்கும் `சீதக்காதி', பிரேம் குமார் இயக்கத்தில் `96' போன்ற படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. கூடவே ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் இணையும் படத்திலும் நடிக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்