விளம்பரம்
முகப்புகோலிவுட்

சென்சாரில் பாஸ் மார்க் வாங்கிய 'கருப்பன்'

  | September 12, 2017 10:50 IST
Karuppan Release Date

துனுக்குகள்

  • இப்படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது
  • இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்
  • இதன் பாடல்கள் & டீஸர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது
ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘புரியாத புதிர்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள படம் பன்னீர் செல்வமின் ‘கருப்பன்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பலே வெள்ளையத் தேவா’ புகழ் தான்யா டூயட் பாடி ஆடியுள்ளார். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். மேலும், கிஷோர், பசுபதி, சிங்கம்புலி, சரத் லோஹிதஸ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு RA.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், VT.விஜயன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. ஏற்கெனவே, படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்து கிரீன் சிக்னலிட்டுள்ளனர். படத்தை வருகிற செப்டெம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘பிக்சர் பாக்ஸ் கம்பெனி’ நிறுவனம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்