விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஷூட்டிங்கை நிறைவு செய்த ‘கருப்பன்’ டீம்

  | May 13, 2017 11:43 IST
Karuppan Movie

துனுக்குகள்

  • விஜய் சேதுபதி கைவசம் 10 படங்கள் உள்ளது
  • பாபி சிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார்
  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா டூயட் பாடி ஆடுகிறார்
‘கவண்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ரெடியான ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘புரியாத புதிர் மற்றும் சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கைவசம் புஷ்கர் - காயத்ரியின் ‘விக்ரம் வேதா’, பிரேம் குமாரின் ‘96’, பன்னீர் செல்வமின் ‘கருப்பன்’, தியாகராஜன் குமாரராஜாவின் ‘அநீதி கதைகள்’, ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’, அருண் குமார் படம், பாலாஜி தரணீதரனின் ‘சீதக்காதி’, கோகுலின் ‘கஞ்சன் ஜங்கா’, சேரன் படம், பிஜு விஷ்வநாத் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘கருப்பன்’ படத்தை ‘ரேனிகுண்டா’ புகழ் பன்னீர் செல்வம் இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பலே வெள்ளையத் தேவா’ புகழ் தான்யா டூயட் பாடி ஆடுகிறார். பாபி சிம்ஹா நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கிஷோர், பசுபதி, சிங்கம்புலி, சரத் லோஹிதஸ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இதன் ஷூட்டிங் நேற்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாம். இன்னும் சில நாட்களில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாம். பரபர ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெகு விரைவில் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்