முகப்புகோலிவுட்

துவங்கியது விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ ஷூட்டிங்

  | December 14, 2018 23:02 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • சீனு ராமசாமி கைவசம் 3 படங்கள் உள்ளது
  • ‘மாமனிதன்’ படத்தை ‘YSR ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் யுவன் தயாரிக்கவுள்ளார
  • இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளார்
‘தர்மதுரை' படத்துக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி கைவசம் ‘இடம் பொருள் ஏவல்' மற்றும் ‘கண்ணே கலைமானே' ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதனையடுத்து சீனு ராமசாமி இயக்கவிருக்கும் புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

‘மாமனிதன்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘YSR ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘இசைஞானி' இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

தற்போது, இதன் ஷூட்டிங் இன்று (டிசம்பர் 14-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சீனு ராமசாமியே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்