விளம்பரம்
முகப்புகோலிவுட்

மக்கள் தொடர்பாளர்களுக்கு விஜய்சேதுபதி தங்கநாணயம் வழங்கினார்

  | September 13, 2017 15:48 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இயக்குநர் ஜனநாதனை நிருவனராக கொண்டது உலகயுதா அமைப்பு
  • தமிழ் சினிமா நூற்றாண்டை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது
  • பி.ஆர்.ஓ. யூனியனை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது
டைரக்டர் ஜனநாதனை நிறுவனராக கொண்டது உலகாயுதா அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் தமிழ் சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இந்த வருடத்தில் திரை உலகில் உள்ள அனைத்து பிரிவிலிருந்தும் நூறு திரைக்கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் சேவையை கவுரவித்து அவர்களை பாராட்டி நூறு பேருக்கும் தங்க நாணயம் வழங்க விழா எடுத்தனர். நூறு பேருக்கும் வழங்கும் தங்க நாணயத்திற்கான செலவினை நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுக்கொண்டார். அந்த விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்திபேசினார்.

மக்கள் தொடர்பாளர்கள் என்று அழைக்கப்படும் சினிமா பி.ஆர்.ஓக்கள் அன்றைய விழா நாளில் கலந்து கொள்ள இயலவில்லை. பி.ஆர்.ஓ. யூனியனை சேர்ந்த மூத்த உறுப்பினர்களான நெல்லை சுந்தரராஜன், திரைநீதிசெல்வம், வி.பி.மணி மூவருக்கும் மக்கள்செல்வன் விஜய்சேதுபதியின் வாழ்த்துக்களோடு அவரது திருக்கரங்களால் தங்கநாணயம் வழங்கி உலகாயுதா அமைப்பின் நிறுவனர் இயக்குனர் ஜனநாதன் வாழ்த்தி பேசினார்.

இந்த இனிய விழாவில் பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் டைமண்ட்பாபு, பொருளாளர் விஜயமுரளி, இணைச்செயலாளர் யுவராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கிளாமர்சத்யா, பாலன், சரவணன், மேஜர்தாசன், முன்னாள் செயலாளர், பெருதுளசிபழனிவேல்,  முன்னாள்பொருளாளர் மௌனம்ரவி, முன்னாள் துணைதலைவர் கோவிந்தராஜ் மற்றும் சிங்காரவேலு, பாரிவள்ளல், துரைப்பாண்டி, ராமானுஜம், மனோகரன், ராஜ்குமார், சி.என்.குமார், கோபிநாத், விஜிமுருகன் உட்பட ஏராளமான பி.ஆர்.ஓக்கள்
கலந்து கொண்டனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்