விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘தளபதி 62’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  | December 07, 2017 15:28 IST
Art Director T Santhanam

துனுக்குகள்

  • விஜய்-க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகி
  • இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து தீபாவளி ஸ்பெஷலலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது, விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் டிவி’யே தங்களது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. இதில் விஜய்-க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
 
காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கவிருக்கிறார். ‘சோலோ’ புகழ் கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், டி.சந்தானம் கலை இயக்குநராகவும் பணியாற்றவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை வருகிற ஜனவரி மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்