முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்த விஜயலட்சுமி

  | August 23, 2018 17:15 IST
Vijayalakshmi

துனுக்குகள்

  • விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 2
  • கிட்டத்திட்ட 60 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரி
  • பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 2. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்திட்ட 60 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், மஹத், ஜனனி அய்யர், யாஷிகா, ஐஸ்வர்யா, மும்தாஜ், ரித்விகா, பாலாஜி, டேனியல், செண்ட்ராயன் ஆகிய 9 போட்டியாளர்கள் மட்டுமே ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் உள்ளனர்.

இன்று (ஆகஸ்ட் 23-ஆம் தேதி) விஜய் டிவி தங்களது ட்வீட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் இல்லத்தில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை விஜயலட்சுமி களமிறங்கியுள்ளார்.

பிரபல இயக்குநர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி, வெங்கட் பிரபுவின் ‘சென்னை – 28’ படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நரேனின் ‘அஞ்சாதே’, கிருஷ்ணாவின் ‘கற்றது களவு’, கார்த்தியின் ‘பிரியாணி’ போன்ற படங்களில் நடித்தார். மேலும், விஜயலட்சுமி தன் கணவர் ஃபெரோஸ் இயக்கிய ‘பண்டிகை’ படத்தை தயாரிக்கவும் செய்தார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்