விளம்பரம்
முகப்புகோலிவுட்

எஸ்.ஜே.சூர்யாவிற்கு மறுவாழ்வளித்த தளபதி விஜய்

  | July 15, 2017 17:13 IST
Celebrities

துனுக்குகள்

  • தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா
  • ஸ்பைடர் திரைப்படத்திலும் இவர் தான் வில்லன்
  • விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா
தெறி, ஜில்லா படங்களின் வெற்றிக்கு பின் இளையதளபதி விஜய் படத்தில் பணியாற்ற முன்னணி இயக்குநர்களும் நடிகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். தற்போது “சம்பளம் எதுவாக இருந்தாலும் எனக்கு ஓ.கே” என்றும் கூறிவிடுகிறார்கள்.

இயக்குநர் அட்லீக்கு பெரிய அளவில் சம்பளம் கிடைத்ததும் அப்படிதான். இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிகம் சம்பளம் கிடைத்ததும் அப்படிதான். ‘மெர்சல்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

நான் நடித்தால் கதாநாயகன் மட்டும் தான் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த இயக்குநர் எஸ் .ஜே.சூர்யாவுக்கு, யார் வந்து நல்ல புத்தி சொன்னாரோ? ‘இறைவி’ மாதிரி திரைப்படங்களில் இடம்பெற்ற இவருடைய அழுத்தமான கதாபாத்திர வாய்ப்பையும் அக்சப்ட் பண்ணக் கற்றுக் கொண்டார். அதற்கப்புறம் வந்ததுதான் ‘மெர்சல்’ திரைப்படத்தின் வாய்ப்பு.
இந்தப்படத்தில் 'தளபதி' விஜய்யின் அழுத்தமான பரிந்துரையின் காரணமாக கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா. அதன் பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்பைடர் திரைப்படத்திலும் இவர்தானே வில்லன்? அங்கும் இதே சம்பளம் என்று கேள்விப்பட்ட உடனே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது தமிழ் சினிமா உலகம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்