விளம்பரம்
முகப்புகோலிவுட்

உலகெங்கும் ரிலீஸாகவுள்ள ‘மெர்சல்’ தியேட்டர் எண்ணிக்கை

  | October 11, 2017 11:02 IST
Mersal Release Date

துனுக்குகள்

  • ‘மெர்சல்’ தமிழ் & தெலுங்கிலும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது
  • ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது
  • இப்படம் உலகெங்கும் அதிக தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது
‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா செம ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே, வெளியான இதன் 4 பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் (அடிரிந்தி) வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், இதுவரை உலகெங்கும் 3292 தியேட்டர்களில் வெளியிட புக்காகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்