முகப்புகோலிவுட்

சீனாவில் 10,000 திரையரங்குகளில் ரிலீஸாகும் விஜய்யின் ‘மெர்சல்’

  | September 12, 2018 15:07 IST
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் காம்போவில் கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ‘மெர்சல்’. இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ பட புகழ் கே.வி.விஜயேந்திர பிரசாத் & ‘விஜய் டிவி’ ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இந்தப் படத்தை சீனாவில் வெளியிடுவதற்கான உரிமையை ‘HGC எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் கைப்பற்றியது. தற்போது, படத்தை மான்டரின் மொழியில் டப் செய்து 10,000 திரையரங்குகளில் டிசம்பர் 6-ஆம் தேதி சீனாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்