விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘தளபதி’யின் ‘மெர்சல்’ புதிய ப்ரோமோக்கள்

  | October 08, 2017 20:52 IST
Mersal Release Date

துனுக்குகள்

  • விஜய் – அட்லி காம்போவில் உருவாகியுள்ள 2-வது படம்
  • இதில் நித்யா மேனன், காஜல், சமந்தா என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம்
  • இப்படத்திற்கு சென்சார் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்ஸாம்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியான இதன் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் 2 புதிய ப்ரோமோக்களை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்