விளம்பரம்
முகப்புகோலிவுட்

மெர்சலா வருவோம், மெர்சலுடன் வருவோம் - விஜய்யின் செய்தி தொடர்பாளர் ரியாஸ்

  | September 23, 2017 14:20 IST
Mersal

துனுக்குகள்

  • மெர்சல் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை
  • தளபதி விஜய் இது போன்ற பல சோதனைகளை கடந்துள்ளார்
  • வரும் தீபாவளி தமிழகத்திற்கு மெர்சல் பண்டிகையாக நிச்சயம் இருக்கும்
ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமாக மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள திரைப்படம் 'மெர்சல்'. 'தளபதி' விஜய் மூன்று கதாபாத்திரங்களில் அசத்த உள்ள இப்படத்தில் கதாநாயககிகளாக நித்தியா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடிக்கின்றனர். எஸ்.ஜெ.சூர்யா மிக முக்கிய வில்லன் வேடத்திலும் பல வருடங்களுக்கு பிறகு வைகை புயல் வடிவேலு மற்றும் கோவை சரளா ஆகியோர் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர்.

வரும் தீபாவளி பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்து படத்துக்கான வேளைகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சரவணன் என்பவர் படத்தின் தலைப்பு எங்களுக்கு சொந்தமானது, எங்களுடைய அனுமதி இல்லாமல் இப்படத்திற்கு மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்தியுள்ளனர், ஆகையால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர், அதற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் மெர்சல் தயாரிப்பு தரப்பு பதிலளிக்க வேண்டும் என்றும் அதுவரை படத்தின் பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்த கூடாது என்று கூறியிருந்தனர்.

இந்த அறிவிப்பு மெர்சல் படக்குழுவினரையும் விஜய்யின் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது, இதற்க்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தளபதி விஜயின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரும் பிரபல சினிமா மக்கள் தொடர்பாளருமான ரியாஸ்.கே.அஹமது நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது "யாரும் இந்த தீர்ப்பை கண்டு வருந்தவேண்டாம், ஒவ்வொரு பெரிய படங்கள் வரும் போது இதுபோன்ற சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது இயல்பு தான், இதற்க்கு முன் தளபதி நடிப்பில் வெளிவந்த சில படங்களுக்கும் பிரச்சனைகள் பல வடிவில் வந்தது அதனை அனைத்தையும் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் முறியடித்து படத்தை வெற்றிகரமாக வெளியிட்டார் என்பது தான் வரலாறு, அதே வகையில் 'மெர்சல்' திரைப்படமும் நிச்சயம் அதே பெயருடன் வெளிவரும், வரும் தீபாவளி பண்டிகை தமிழகத்திற்கு 'மெர்சல்' பண்டிகையாக இருக்கும், மெர்சலா வருவோம் மெர்சலுடன் வருவோம் ரசிகர்கள் தயாராகிக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்