விளம்பரம்
முகப்புகோலிவுட்

அதிக விலைக்குப் போன ‘மெர்சல்’

  | October 12, 2017 10:54 IST
Mersal Release Date

துனுக்குகள்

  • ‘மெர்சல்’ வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • படத்தை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது
  • கர்நாடகா வெளியீட்டு உரிமை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது
‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா செம ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே, வெளியான இதன் 4 பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. சமீபத்தில், படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் கர்நாடகா வெளியீட்டு உரிமையை ‘HORIZON ஸ்டுடியோ’ நிறுவனம் அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்