விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘தளபதி’யின் மிரட்டலான ‘மெர்சல்’ டீஸர்

  | September 22, 2017 12:09 IST
Mersal Teaser

துனுக்குகள்

  • விஜய் – அட்லி காம்போவில் உருவாகும் 2-வது படம்
  • இதன் போஸ்டர்ஸ் மற்றும் பாடல்கள் செம லைக்ஸ் குவித்தது
  • அட்லியின் பிறந்த நாளை முன்னிட்டு டீஸரை வெளியிட்டுள்ளனர்
‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் கூட்டணியில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். தளபதிக்கு எதிராக மோதும் ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளாராம்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ பட புகழ் கே.வி.விஜயேந்திர பிரசாத் & ‘விஜய் டிவி’ ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியுள்ளனராம். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் போஸ்டர்ஸ் மற்றும் ஆடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
 

இந்நிலையில், இன்று (செப்டெம்பர் 21-ஆம் தேதி) இயக்குநர் அட்லியின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர். மிரட்டலான இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தை வருகிற தீபாவளி ரேஸில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்