விளம்பரம்
முகப்புகோலிவுட்

உலக அளவில் சாதனை புரிந்த மெர்சல் டீசர் - சிறப்பு கட்டுரை

  | September 22, 2017 16:31 IST
Mersal Teaser

துனுக்குகள்

  • ரசிகர்களுக்கு காட்டிய ஆசையை இதில் உண்மையாக்கியிருக்கிறார் அட்லீ
  • உலக அளவில் அதிகம் விரும்பப்பட்ட டீசராக 6 லட்சம் லைக்குகளை பெற்றிருக்கிறது
  • மூன்று பரிணாமத்தை கதைக்குரிய முக்கியத்துவதுடன் வெளிப்படுத்துகிறது
தெறி படத்தின் முதல் பார்வை (first look) இல் ஒரு விஜயின் வாயை இன்னொருவர் மூடியிருக்க இன்னொரு விஜய் அதை பார்ப்பது போல ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கும்.

மூன்று வேடங்களில் விஜய் நடிப்பதாக எதிர்பார்ப்பு எகிறி பின் டீசர் ட்ரைலரின் மூலம் ஒரே விஜய் தான் என தெரிந்து கொண்டோம்.

அதில் ரசிகர்களுக்கு காட்டிய ஆசையை இதில் உண்மையாக்கியிருக்கிறார் அட்லீ.
ஒரு ரசிகனின் பார்வையிலிருந்து ஒரு நடிகனை எப்படிக்காட்டினால் ரசிக்க முடியுமோ, அதை திறம்பட ஒரு நல்ல கதையின் அடித்தளத்தில் செயல்படுத்துவதே வணிக ரீதியான வெற்றியை சாத்தியமாக்கும்.

முரட்டு காளையில் வரும் ரஜினியை போல, விருமாண்டியில் வரும் கமலை போல விஜயை பார்க்கவேண்டும் எனும் ஆவல் எந்த ரசிகனுக்குத்தான் இருக்காது...
மிக நுட்பமாக விஜயையும் அவருக்கு இருக்கும் மாஸயும் இது போன்றதொரு கிராமத்து பின்னணியில் அமையப்பெற்ற ஒரு கதாபத்திரத்தில் அமைத்து அதை சுற்றி அந்த டீசரை வடிவமைத்ததே ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.

வட சென்னையின் பிள்ளையாக ஒருவர் வேட்டி சட்டையுடன், மேஜிக் நிபுணராக மற்றொரு பரிமாணத்தில் இன்னொருவர் என A சென்டரிலிருந்து C சென்டர் வரை அனைத்தையும் வணிக ரீதியாக வெகு நேர்த்தியாக சிந்தித்தே அமைத்திருக்கிறார் அட்லி.

தெறி டீசரை போல அதிவேகமாக சண்டைக்காட்சிகளை முக்கியப்படுத்தாமல், நிறுத்தி நிதானமாக மூன்று வெவ்வேறு பரிணாமத்தை கதைக்குரிய முக்கியத்துவதுடன் வெளிப்படுத்துகிறது மெர்சல் டீசர்.

ஒற்றைக்கையில் எடுக்கும் தண்டால், வேட்டியுடன் அரசியல்வாதிக்குரிய தோரணையுடன் நடப்பதாகட்டும், மழையில் ஒருவனை அடித்துவிட்டு மீசையை முறுக்குவதாகட்டும்..
அட்லீ இங்கேயே பாதி கிணற்றை தாண்டி விட்டார்..

அபூர்வ சகோதரர்களிலிருந்து, மூன்று முகம் வரை வரை தந்தையின் கொலைக்கு பழி வாங்கும் மகன்களை பற்றியது தான் கதை, ஆனால் அது கூறப்படும் விதத்தில் தான் பாகுபலியாவதும் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போவதும்.

மெர்சல் இந்த பழிவாங்கும் கதையை ரசிக்கும் விதத்தில் கூறினால் அதன் வெற்றி தமிழ் சினிமாவில் புதிய உயரமாக நிச்சயம் இருக்கும்.

உலக அளவில் அதிகம் விரும்பப்பட்ட டீசராக மெர்சல் 6 லட்சம் லைக்குகளை 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்