முகப்புகோலிவுட்

தடைகள் தாண்டி வருகிறான் ‘மெர்சல்’ அரசன்

  | October 06, 2017 16:50 IST
Mersal Release Date

துனுக்குகள்

  • விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார்
  • ‘மெர்சல்’ படத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது உயர்நீதி மன்றம்
  • படக்குழுவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ளது
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய்யின் வெற்றிக் கூட்டணியில் தயாராகும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய் முதன் முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 ஹீரோயின்ஸாம். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்து வரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே, வெளியிடப்பட்ட படத்தின் ஆடியோ மற்றும் மிரட்டலான டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து டிரெண்டானது. சமீபத்தில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் இப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 2014-ல் ‘மெரசலாயிட்டேன்’ என்ற டைட்டிலை ‘AR ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனம் பதிவு செய்திருந்ததால், ‘மெர்சல்’ எனும் தலைப்பை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
 
ஆதலால், சென்னை உயர்நீதி மன்றம் ‘மெர்சல்’ படத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (அக்டோபர் 6-ஆம் தேதி) ‘மெர்சல்’ டீமுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்