முகப்புகோலிவுட்

விஜய்யின் 'சர்கார்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  | October 11, 2018 15:04 IST
Vijay Sarkar

துனுக்குகள்

  • இதில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இந்த படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • இப்படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்
அட்லியின் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'சர்கார்' படத்தில் ‘தளபதி’ விஜய் நடித்துள்ளார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ளனராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் டீசரை வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்