முகப்புகோலிவுட்

சென்னையில் நடக்கும் ஷுட்டிங்.. வைரலாகும் ஸ்டில் - விஜய் 62 அப்டேட்

  | March 02, 2018 15:38 IST
Vijay 62

துனுக்குகள்

  • விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இது விஜய்யின் கேரியரில் 62-வது படமாம்
  • இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனர்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும் நடைபெற்றது.

தற்போது, படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஸ்டைலிஷாக இருக்கும் விஜய்யின் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் ரிலீஸாகி வைரலாக பரவி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்