விளம்பரம்
முகப்புகோலிவுட்

'தளபதி 62' படத்தின் அசத்தலான அப்டேட்

  | May 14, 2018 11:40 IST
Thalapathy 62 Shooting

துனுக்குகள்

  • இது விஜய்யின் கேரியரில் 62-வது படமாம்
  • கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்
  • விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது.

ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். தற்போது, படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் நடன அமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் டூயட் பாடும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்படுகிறதாம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்