முகப்புகோலிவுட்

பாடலுக்காக அமெரிக்கா செல்லும் 'விஜய் 62' குழு

  | February 17, 2018 10:22 IST
Vijay 62

துனுக்குகள்

  • இந்த படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளது
  • சமீபத்தில், இப்படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது
  • ’24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும் நடைபெற்றது.

தற்போது, 3-ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஷெடியூலை தொடர்ந்து, விரைவில் படக்குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு 2 பாடல் காட்சிகள் மற்றும் படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்