முகப்புகோலிவுட்

இறுதிகட்டத்தில் கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்'

  | February 09, 2018 14:04 IST
Dhruva Natchathiram First Look Postes

துனுக்குகள்

  • விக்ரம் கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 2 ஹீரோயின்ஸாம்
  • இதன் 2 ஸ்டைலிஷ் டீஸர்கள் நல்ல வரவேற்பை பெற்றது
விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’, ராஜேஷ்.எம்.செல்வா படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், மிக முக்கிய வேடங்களில் இயக்குநர் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு ஸ்டைலிஷ் டீஸர்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது, படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 22 நாட்களின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்தாண்டு (2018) மே மாதம் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்