முகப்புகோலிவுட்

நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் இதுதானா?

  | January 11, 2019 21:02 IST
Chiyaan Vikram

துனுக்குகள்

  • மகாவீர் கர்ணா படத்திலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார்
  • “கடாரம் கொண்டான்" படம் முடிவுறும் நிலையில் இருக்கிறது
  • கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார்
நடிகர் விக்ரம் கையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவின் `கடாரம் கொண்டான்', அடுத்ததாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களும் முடிவுறும் கட்டத்தை எட்டியுள்ளது.
 
“கடாரம் கொண்டான்” படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
 
படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
 
இந்நிலையில் மகாவீர் கர்ணா படத்திலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ஆர்.எஸ் விமல் இயக்குகிறார். இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கவிருப்பதாக பேசப்படுகிறது. அக்டோபர் மாதம் இந்த படத்திற்கான படபிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.   விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குநர் பாலாவின் தெலுங்கு ரீமேக்கான வர்மா படத்தை முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்