விளம்பரம்
முகப்புகோலிவுட்

விக்ரம் பிரபுவின் ‘சத்ரியன்’ ரிலீஸ் ப்ளான்

  | April 21, 2017 16:40 IST
Sathriyan Movie

துனுக்குகள்

  • விக்ரம் பிரபு கைவசம் 3 படங்கள் உள்ளது
  • மஞ்சிமா, ஐஸ்வர்யா என டபுள் ஹீரோயின்ஸாம்
  • ‘சத்ரியன்’ பாடல்கள் & டிரையிலர் வைரலானது
‘வீரசிவாஜி’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்து வந்த படங்கள் ‘சத்ரியன், நெருப்புடா’. அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கியுள்ள ‘நெருப்புடா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தற்போது விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் சூர்யா இயக்கும் ‘பக்கா’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதில் ‘சுந்தரபாண்டியன்’ புகழ் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள ‘சத்ரியன்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மற்றுமொரு ஹீரோயினாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளாராம். மேலும், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இதன் பாடல்கள் மற்றும் டிரையிலர் சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்டு ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. இந்த டிரையிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், படத்தை வருகிற மே 19-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்