விளம்பரம்
முகப்புகோலிவுட்

விரட்டும் விக்ரம், மிரட்டும் வேதா - "விக்ரம் வேதா" டீஸர்

  | February 24, 2017 13:03 IST
Vijay Sethupathi Next Film

துனுக்குகள்

  • வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள்
  • "ஓரம் போ" படத்தினை அடுத்து இப்படத்தினை இயக்கியுள்ளார்
  • இப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி இயக்கி வரும் திரைப்படம் " விக்ரம் வேதா" இத்திரைப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி வட சென்னையில் பல குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் தலைவனாகவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் நடைபெறும் மோதலே இப்படத்தின் கதை.

எந்த காதாபாத்திரமாக இருந்தாலும் அதனை எவ்வித சாயலும் இல்லாமல் அக்கதாபாத்திரமாகவே மாறும் தன்மையுடையவர் விஜய் சேதுபதி. "விக்ரம் வேதா" டீஸரின் மூலம் மீண்டும் ஒரு முறை தன்னுடைய கதாபாத்திர நேர்த்தியை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் என்றே கூறலாம். மற்றொரு புறம் நடிகர் மாதவன், மின்னலே, அலைபாயுதே போன்ற படங்களில் பெண்களின் கனவு கண்ணனாக வளம் வந்தவர், "இறுதி சுற்று" திரைப்படத்தில் ஒரு கடுமையான குத்துசண்டை பயற்சியாளராக நடித்திருந்தார். இறுதி சுற்றில் இருந்த தன்னுடைய மல்யுத்த உடம்பை "விக்ரம் வேதா" திரைப்படத்திற்காக கட்டுடல் மேனியாக மாற்றியுள்ளார்.
 

இன்று வெளியாகியுள்ள "விக்ரம் வேதா" திரைப்படத்தின் டீஸரில், அனைத்து காட்சிகளிலும் மாதவன், விஜய் சேதுபதி இருவரும் இணைந்தே வருகின்றனர். டீஸர் முழுவதும் துப்பாக்கி சப்தங்கள் முழங்கிய வண்ணமே உள்ளன. ஒருவரின் மீது ஒருவர் துப்பாக்கி நீட்டும் காட்சியில் இருவருக்குமான வேற்றுமையை இயக்குனர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவர்கள் இருவருமே வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர்கள் என்பது நாம் அறிந்ததே, இவர்கள் இருவரையும் இணைத்ததன் மூலமே இயக்குநர்கள் பாதி வெற்றியை அடைந்துள்ளனர், அதனையும் தாண்டி இயக்குனர் என்ன மேஜிக் செய்துள்ளார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி. எஸ். வினோத் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். டீஸரில் விக்ரமும், வேதாவும் சண்டையிடும் காட்சிகளை மிகவும் தத்துரூபமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத். இப்படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகின்றனர், இசையமைப்பாளர் சி.எஸ். சாம் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் "புரியாத புதிர்" திரைப்படத்திற்கும் சி.எஸ். சாம் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்