இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 2 ஹீரோயின்ஸாம்
இன்று காலை படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் லீக்கானது
இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்
விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’, ராஜேஷ்.எம்.செல்வா படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம்.
மேலும், மிக முக்கிய வேடங்களில் இயக்குநர் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா, விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
ஏற்கெனவே, வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு ஸ்டைலிஷ் டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், இன்று (ஜூன் 5-ஆம் தேதி) காலை படத்தின் புதிய டீசர் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவியது. இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தற்போது, கெளதம் மேனன் ட்வீட்டரில் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.