விளம்பரம்
முகப்புகோலிவுட்

இறுதிக்கட்டத்தில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’

  | September 19, 2017 19:26 IST
Dhruva Natchathiram

துனுக்குகள்

  • விக்ரம் கைவசம் மூன்று படங்கள் உள்ளது
  • இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 2 ஹீரோயின்ஸாம்
  • இயக்குநர் பார்த்திபன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்
‘இருமுகன்’ படத்திற்கு பிறகு செம ஸ்டைலிஷாக கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், பக்கா மாஸாக விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ படத்திலும் நடித்து வருகிறார் ‘சியான்’ விக்ரம். இதனைத் தொடர்ந்து ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தயாராகவிருக்கும் ‘சாமி’ படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதில் ‘துருவநட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், மிக முக்கிய வேடங்களில் இயக்குநர் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு ஸ்டைலிஷ் டீஸர்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இஸ்தான்புல்லில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கெளதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “வெகு விரைவில் துருவின் உலகிற்குள் உங்களை அழைத்துச் செல்வேன் என நான் நம்புகிறேன். அல்லது ஜான் அல்லது யோஹனின் உலகத்திற்கு. சியானுக்கு நன்றி” என்று ஸ்டேட்டஸ் தட்டியதோடு, படத்தின் இரண்டு புதிய ஸ்டில்ஸை ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்