முகப்புகோலிவுட்

‘பெருமாள் பிச்சை’ வாரிசுகளுடன் மோதும் 2 விக்ரம் – லீக்கான ‘சாமி 2’ ஸ்டில்

  | December 27, 2017 15:16 IST
Saamy 2 Movie Shooting Spot

துனுக்குகள்

  • ‘சாமி’ படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் லீக்காகியுள்ளது
  • 2-ஆம் பாகத்தின் கதை 29­ ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கவிருக்கிறது
‘இருமுகன்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’, ஹரியின் ‘சாமி 2’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘சாமி 2’-வில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். முக்கிய வேடங்களில் ‘இளைய திலகம்’ பிரபு, சூரி, பாபி சிம்ஹா, OAK.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளது.
 
இப்புகைப்படத்தில் உள்ள பேனரில் “தியாகி.பெருமாள் பிச்சை அவர்களின் 29-ஆம் ஆண்டு நினைவுநாள் விழா என்று குறிப்பிட்டு, கீழே அவரின் மகன்களான மகேந்திரபிச்சை (OAK.சுந்தர்), ராவணபிச்சை (பாபி சிம்ஹா), தேவேந்திரபிச்சை (ஜான் விஜய்) ஆகிய மூவரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இதன்படி பார்க்கையில், ‘சாமி’ பார்ட் 1-யின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் கதை 29­ ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கவிருக்கிறது. வில்லன் பெருமாள் பிச்சையின் மகன்களுடன் மோதப்போவது ஆறுச்சாமியின் (விக்ரம்) மகன் (விக்ரம்) என தெரிகிறது. ஆகவே, விக்ரம் டபுள் ஆக்ஷனில் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்