முகப்புகோலிவுட்

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ சென்சார் ரிசல்ட்

  | January 03, 2018 21:21 IST
Sketch Movie

துனுக்குகள்

  • விக்ரமுடன் தமன்னா டூயட் பாடும் முதல் படம்
  • இதன் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடவுள்ளனர்
‘இருமுகன்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ஹரியின் ‘சாமி 2’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘ஸ்கெட்ச்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ஆர்.கே.சுரேஷ், ‘கங்காரு’ புகழ் ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு தமன் இசையமைத்துள்ளார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ‘கனவே கனவே - அட்சி புட்சி - சீனி சில்லாளே’ ஆகிய 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் விஜய் சந்தரே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்