முகப்புகோலிவுட்

வைரலாகும் ‘ஸ்கெட்ச்’ தீம் பாடல் ப்ரோமோ

  | January 10, 2018 19:40 IST
Sketch Movie Theme Song Promo

துனுக்குகள்

  • இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்
  • இதன் 5 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவுள்ளனர்
ஆனந்த் ஷங்கரின் ‘இருமுகன்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஸ்கெட்ச்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ஆர்.கே.சுரேஷ், ‘கங்காரு’ புகழ் ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு தமன் இசையமைத்துள்ளார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் 5 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தில் இடம்பெறும் தீம் பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்