முகப்புகோலிவுட்

நடிகர் சங்க கட்டிடமா? திருமணமா? எது முதலில்!

  | January 11, 2019 18:02 IST
Vishal

துனுக்குகள்

  • நடிகர் சங்க செயலாளராக இருப்பவர் இவர்
  • தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும் பதிவி வகிக்கிறார்
  • விரைவில் இவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது
தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் நடிகர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர். 'துப்பறிவாளன்', 'பாண்டியநாடு', 'ஆம்பள' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
 
இவரும், நடிகை வரலக்ஷ்மியும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவியது. இதை ஒரு பேட்டியில் அவர் தெளிவாக கூறி அந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
 
சமீபத்தில் நடிகர் விஷால் தொழிலதிபரின் மகள் அனிஷாவை திருமணம் முடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
 
இதுகுறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடைபெற இருப்பது உண்மைதான். இது காதல் திருமணம்தான். ஒரு நிகழ்ச்சியில் அனிஷா ரெட்டியை சந்தித்தேன். அப்போதிலிருந்தே இருவரும் காதலர்களாகிவிட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் திருமணம். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்