முகப்புகோலிவுட்

என் திருமணத்தை நானே அறிவிப்பேன் - விஷால் ட்வீட்

  | January 16, 2019 11:18 IST
Vishal

துனுக்குகள்

  • தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சங்கத்தலைவர் இவர்
  • இவரும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக வதந்தி பரவியது
  • நடிகர் சங்கப் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்
சமீபத்தில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், அவர் தொழிலதிபரின் மகளை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

அதுமட்டுமல்லாமல், விஷாலின் வருங்கால மனைவி இவர்தான் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வந்தது. அந்த தகவல் முற்றிலும் பொய் என்று விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதில் “எனது திருமணம் குறித்து இதுபோன்ற தவறான செய்திகள் எப்படி வெளிவருகின்றன என்பது தெரியவில்லை. தவறை திருத்திவிடுங்கள். இது நியாயமே இல்லை. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு திருமணம் நிச்சயமானால் நானே அதை முறைப்படி அதிகாரபூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்