முகப்புகோலிவுட்

சின்னத்திரையில் களமிறங்கும் விஷால்

  | September 19, 2018 15:11 IST
Vishal

துனுக்குகள்

  • விஷால் கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • தெலுங்கில் லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ‘மேமு சைத்தம்’
  • சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டு
பி.எஸ்.மித்ரனின் ‘இரும்புத்திரை’ படத்துக்கு பிறகு நடிகர் விஷால் கைவசம் லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது.

படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக வெளியிடவுள்ளனர். சமீபத்தில், விஷால் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ‘மக்கள் நல இயக்கம்’ என பெயர் மாற்றியதோடு, ‘அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
 
தற்போது, தெலுங்கில் நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு சைத்தம்’ என்ற நிகழ்ச்சியை தமிழில் விஷால் தொகுத்து வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் “விதைச்சவன் தூங்கலாம்... விதைகள் தூங்காது... அன்பை விதைப்போமா...” என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஷால்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்