முகப்புகோலிவுட்

வேட்பு மனு நிராகரிப்பு – பிரதமர், ஜனாதிபதியிடம் விஷால் புகார்

  | December 06, 2017 15:05 IST
Vishal Politics

துனுக்குகள்

  • விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது
  • விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதாம்
  • இச்செயல் நீதிக்கு புறம்பானது, இதற்கு நீதி கிடைக்குமென நம்புகிறேன்
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று மாலை விஷாலின் வேட்பு மனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உடனே, விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

பின், காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியவுடன் விஷால் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். வேட்பு மனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டி தான், தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளதாக விஷால் கூறியதோடு ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
 
ஆனால், இரவு 11 மணி அளவில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதாலும், முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது என தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். தற்போது, இது தொர்பாக விஷால் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் டேக் செய்து ஒரு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் விவகாரத்தில் என்ன நடந்து வருகிறதென தங்களுக்கு தெரியுமென நான் நம்புகிறேன். என்னுடைய வேட்பு மனு முதலில் ஏற்கப்பட்டு, பின் நிராகரிக்கப்பட்டது. இச்செயல் நீதிக்கு புறம்பானது. இதற்கு நீதி கிடைக்குமென நம்புகிறேன்” என்று விஷால் பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்