விளம்பரம்
முகப்புகோலிவுட்

அடுத்த கட்டத்திற்கு சென்ற விஷாலின் 25-வது படம்

  | August 10, 2017 15:11 IST
Sandakozhi 2 Release Date

துனுக்குகள்

  • விஷால் கைவசம் 6 படங்கள் உள்ளது
  • 2005-ஆம் ஆண்டு வெளியான ‘சண்டக்கோழி’ மெகா ஹிட்டானது
  • விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார்
சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு விஷால் நடித்த சுந்தர்.சியின் ‘மதகஜராஜா’ சில வருடங்களாகவே வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. ஏனெனில், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், ராஜ்கிரண், லால், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடிக்கவுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார். இது விஷாலின் 25-வது படமாம்.

மிக முக்கிய வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக சக்தி பணியாற்றவுள்ளாராம். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) படத்தின் பூஜை போடப்பட்டது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர். அதற்காக சென்னையில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட திருவிழா செட் போடத் தொடங்கியுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2018) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்