முகப்புகோலிவுட்

சென்சாரில் பாஸ் மார்க் வாங்கிய ‘இரும்புத்திரை’

  | March 04, 2018 12:55 IST
Irumbu Thirai Censor Certificate

துனுக்குகள்

 • இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார்
 • இதன் பாடல்கள் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
 • இப்படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்
கோலிவுட்டில் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார். விஷாலுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை விஷாலே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்