முகப்புகோலிவுட்

விஷாலின் 25-வது படமான ‘சண்டக்கோழி 2’ டிரெய்லர்

  | May 11, 2018 11:09 IST
Sandakozhi 2 Movie Teaser

துனுக்குகள்

 • இது விஷாலின் கேரியரில் 25-வது படம்
 • விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்
 • இதில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நெகட்டிவ் ஷேடில் வலம் வரவுள்ளாராம்
2005-ஆம் ஆண்டு விஷால் – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. தற்போது, இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம்.

முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி, அர்ஜை ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார்.

 

சமீபத்தில், படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில், படத்தின் டிரெய்லரை விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்