முகப்புகோலிவுட்

விஷாலின் 25-வது படமான‘சண்டக்கோழி 2’ டிரெய்லர்

  | September 28, 2018 17:05 IST
Vishal

துனுக்குகள்

  • இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம்
  • படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்

2005-ஆம் ஆண்டு விஷால் – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம்.

முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி, அர்ஜை ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ளனராம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார்.



சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்