விளம்பரம்
முகப்புகோலிவுட்

பைரஸி நபரை கண்டுபிடிச்சுட்டேன் – ‘துப்பறிவாளன்’ விஷால்

  | July 21, 2017 15:46 IST
Vishal

துனுக்குகள்

  • இப்படம் ‘செர்லாக் ஹோம்ஸ்’ நாவல் ஸ்டைலில் இருக்குமாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் செம லைக்ஸ் குவித்து வருகிறது
  • என்னோட வாழ்க்கைல மிகப் பெரிய பொக்கிஷமா கிடைச்ச மனிதர் மிஷ்கின் சார்
சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு விஷால் நடித்த சுந்தர்.சியின் ‘மதகஜராஜா’ சில வருடங்களாகவே வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, பிரபு தேவாவின் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், இயக்குநர் கே.பாக்யராஜ், சிம்ரன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 20-ஆம் தேதி) மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய விஷால், என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது, முதல் படமாக சுசீந்திரனின் ‘பாண்டியநாடு’ அமைந்தது. ஒவ்வொரு தயாரிப்பாளருமே யோசிக்கும் ஒரே விஷயம், நம் பேனரில் தரமான படங்கள் பண்ண வேண்டும் என்பது தான். அந்த வகையில ‘துப்பறிவாளன்’ நல்ல தரமான படமா வந்திருக்கு.

ஒரு நடிகனா, ஒரு தயாரிப்பாளரா இந்தப் படம் எனக்கு பெரிய ஊக்கம் கொடுக்கும்னு நம்புறேன். கிட்டத்திட்ட கடந்த 8 வருஷமா நானும் மிஷ்கின் சாரும் சேர்ந்து படம் பண்ணனும்னு யோசிச்சுட்டே இருந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்பு அமையவில்லை. என்னோட வாழ்க்கைல மிகப் பெரிய பொக்கிஷமா கிடைச்ச மனிதர் தான் மிஷ்கின் சார்.

இந்த படத்தோட டைட்டில் & என்னுடைய கேரக்டர் மாதிரியே நான் ஒரு துப்பறிவாளனா அந்த பைரஸி நபர கண்டுபிடிச்சுட்டேன். நீ யாருன்னு எனக்குத் தெரியும், நீ எங்க இருக்கேன்னும் எனக்குத் தெரியும். இன்னும் இரண்டே வாரத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், யார் அந்த பைரஸி நபர்னு அறிவிப்பேன் என்று விஷால் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்