விளம்பரம்
முகப்புகோலிவுட்

கணியன் பூங்குன்றனாக விஷால் துப்பறியும் டிரையிலர்

  | September 11, 2017 12:09 IST
Thupparivaalan Making Video

துனுக்குகள்

  • விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம்
  • தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ நாவல் ஸ்டைலில் இருக்குமாம்
  • இதன் மிரட்டலான மேக்கிங் வீடியோ வைரலானது
சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் தயாராகியுள்ள படம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’. இதில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம்.

அரோல் கொரேலி இசையமைத்துள்ள இதற்கு கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், டீஸர், ‘இவன் துப்பறிவாளன்’ பாடல் மற்றும் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற செப்டெம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்