முகப்புகோலிவுட்

துவங்கியது விஷ்ணு, ஷிவானி ஜோடிசேரும் படத்தின் ஷூட்டிங்

  | July 11, 2018 15:33 IST
Vishnu Vishal Next Film

துனுக்குகள்

  • விஷ்ணு விஷால் கைவசம் ஐந்து படங்கள் உள்ளது
  • இதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கவுள்ளார்
  • இப்படத்தை விஷ்ணுவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார்
முருகானந்தமின் ‘கதாநாயகன்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் கைவசம் ராமின் ‘ராட்சசன்’, செல்லா அய்யாவுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, எழிலின் ‘ஜகஜால கில்லாடி’, பிரபு சாலமனின் ‘காடன்’, வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் படம் ஆகிய 5 படங்கள் உள்ளது. இதில் அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ள படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்கவுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், ராம்தாஸ், சிங்கம் புலி, பிரவீன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர் பாடகர் க்ரிஷ் இசையமைக்கவுள்ள இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதனை விஷ்ணுவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார்.
 
தற்போது, இதன் ஷூட்டிங் இன்று (ஜூலை 11-ஆம் தேதி) முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை விஷ்ணுவே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்