முகப்புகோலிவுட்

பிரபு சாலமனின் புதிய படம் ‘கும்கி 2’வா? – விளக்கமளித்த விஷ்ணு

  | May 28, 2018 13:38 IST
Vishnu Vishal

துனுக்குகள்

  • பிரபு சாலமன் இயக்ககும் புதிய படம் ‘கும்கி 2’ என தண்டோரா போடப்பட்டது
  • இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகுகிறது
  • 3 மொழிகளிலுமே தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடிக்கிறார்
தனுஷின் ‘தொடரி’ படத்திற்கு பிறகு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘கும்கி’ 2-ஆம் பாகமென கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது குறித்து படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் ட்வீட்டரில் விளக்கமளித்துள்ளார். இந்த படம் ‘கும்கி 2’ இல்லையாம்.

‘ஹாதி மேரா சாத்தி’ (பாலிவுட் வெர்ஷன்) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு வெர்ஷன்களில் ஹீரோவாக விஷ்ணு நடிக்கும் இதன் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படுமாம்.
 
3 மொழிகளிலுமே தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடிக்கிறார். கடந்த 26 நாட்களாக மூணாரில் நடைபெற்று வந்த ஷெடியூலும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்