முகப்புகோலிவுட்

'கும்கி 2'வுக்காக விஷ்ணு விஷாலுடன் கூட்டணி அமைத்த பிரபு சாலமன்

  | May 26, 2018 13:36 IST
Kumki 2

துனுக்குகள்

  • ‘கும்கி’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதன் இரண்டாம் பாகத்தையும் பிரபு சாலமனே இயக்கி வருகிறார்
  • கேரளாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஷ்ணுவும் கலந்து கொண்டார்
2012-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு – லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளியான படம் ’கும்கி’. பிரபு சாலமன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் மழை பொழிந்தது. இதில் தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்போது, இதன் இரண்டாம் பாகத்தையும் பிரபு சாலமனே இயக்கி வருகிறார். கடந்த ஆண்டே (2017) ஹீரோ கதாபாத்திரத்தின் சிறு வயது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டதாம். இந்நிலையில், படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், கேரளாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணுவும் கலந்து கொண்டாராம். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. வெகு விரைவில் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்